ஜோகூர்:
ஜோகூர் அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 6-ஆம் தேதி சிறப்பு மாற்று பொது விடுமுறையாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கடந்த டிசம்பர் 23-ஆம் ஜோகூர் மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், 2024-ஆம் ஆண்டின் கடைசி வாரத்திற்கும் 2025-ஆம் ஆண்டின் முதல் வாரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படும் என்றும்,
அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உட்பட ஆறு நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை ஜோகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், மனிதவளக் குழு தலைவர் லீ டிங் ஹான் உறுதிப்படுத்தினார்.
மேலும் ஜோகூரின் வார இறுதி மாறுதல் காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஜனவரி 6-ஆம் தேதியை சிறப்பு மாற்று விடுமுறையாக அறிவிக்க ஜோகூர் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.