மண்டையை பிளக்கும் வெயில்; வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

கோலாலம்பூர்:

தற்போது நாட்டின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வரும் நிலையில், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறும், திறந்த வெளியில் எரியூட்டும்நடவடிக்கைகள் ஈடுபடவேண்டாம் என்றும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் தொடங்கி செப்டம்பர் வரையான காலப்பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழையின் போது, மழை வீழ்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை மையத்தின் எதிர்வுகூறியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், அதிக வெப்பநிலையால் வெப்பத்தாக்கம் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர் என்று நினைவுகூரிய அவர், மக்கள் எப்போதும் வானிலை மற்றும் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here