நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அரச மன்னிப்போ அல்லது தண்டனை கால குறைப்புக்கோ மனு செய்ய விரும்பினால் அதன் தொடர்பான விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அரண்மனை வலியுறுத்தியது.
மன்னிப்பு வாரியத்தின் அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக அம்மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கின் வீட்டுக்காவல் குறித்து தற்போது நடைபெற்று வரும் அனல் பறக்கும் விவாதங்கள் பற்றி கருத்துரைக்கும் வகையில் இஸ்தானா நெகாரா இவ்விளக்கத்தை அளித்தது.
இம்மனு அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மன்னிப்பு வாரியத்தின் அடுத்த கூட்டத்தில் மட்டுமே அது பரிசீலிக்கப்படும்.
அனைத்து தரப்பினரும் அரசியலமைப்பு நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்று இன்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரண்மனை வலியுறுத்தியது.