ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வா? ரோகித் சர்மா மறுப்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் ப்பை கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.
இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது பேட்டி அளித்த ரோகித் சர்மா, தற்போது நடைபெறும் ஒரு போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன். எப்போது ஓய்வுப்பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் எங்கும்

செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். பும்ராவின் கேப்டன்ஷிப் பாராட்டத்தக்கதாக சிறப்பாக தான் உள்ளது என்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய

ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மார்னஸ் லபுஸ்சேன் 2 ரன்களில் வந்த வேகத்திலேயே பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here