தங்காக்:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிய சாலையின் KM171 இல் வாகனம் மோதி கவிழ்ந்ததில் 75 வயது முதியவர் உயிரிழந்தார்.
நேற்று சனிக்கிழமை (ஜன. 4) மாலை 4.02 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பில் மீட்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்ததாக தாங்காக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத் தலைவர் ரஃபியா அஜீஸ் தெரிவித்தார்.
உடனே தாங்காக் மற்றும் ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 17 தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் அகற்றப்பட்டதாகவும் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சொன்னார்.
இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தாங்காக் மாவட்ட காவல்துறை தலைவர் ரோஸ்லான் முஹமட் தாலிப், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார் மற்றும் இரண்டு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர பயணித்த SUV வாகனம் ஒரு லோரியின் பின்புறத்தில் மோதி, இடதுபுறம் மோதிகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,” என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.