ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை: L&T சேர்மனின் கருத்துக்கு தீபிகா படுகோனின் ரியாக்ஷன்

L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் “உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.

ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.

சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கருத்து தெரிவித்துள்ளார் #MentalHealthMatters என்பதை பதிவிட்டு “இவ்வளவு மூத்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here