அண்மையில் பல அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் இன்று (ஜனவரி 15) கைது செய்யப்பட்டார்.
தென்கொரிய வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூன் இருந்த வீட்டின் வளாகத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்த சில மணிநேரத்துக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரைக் கைது செய்து கொண்டு செல்வதாக நம்பப்படும் வாகனங்கள் அவரின் அதிகாரத்துவ இல்லத்திலிருந்து புறப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
























