இரண்டு வாரங்களில் ஜோகூரில் RM21.68 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 1,184 பேர் கைது

ஜோகூர் பாரு:

டந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை, ஜோகூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை RM21.68 மில்லியன் மதிப்புள்ள 155.75 கிலோகிராம் மற்றும் 266.55 லிட்டர் போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது, அதேகாலகட்டத்தில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,184 நபர்களைக் கைது செய்ததுள்ளது என்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.

சமீபத்தில் ஜனவரி 10 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி காலை 6.30 மணி வரை நடத்தப்பட்ட இரண்டு சோதனைகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் என்று முறியடிக்கப்பட்டது.

அப்போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய மூளையாக இருந்த இருவரை கைது செய்ததுடன், நகரைச் சுற்றியுள்ள இரண்டு குடியிருப்புகளில் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கிட்டத்தட்ட 24 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கும்பல் கடந்த அக்டோபர் 2024 முதல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது என்று, இன்று ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் நடந்த ஓர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள சந்தைக்கான சொகுசு குடியிருப்புகளை போதைப்பொருள்கள் மறைத்து வைக்கும் இடமாக அக்கும்பல் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் நாட்டின் வடக்கில் இருந்து போதைப்பொருள் விநியோகம் பெறப்படுவதாக நம்பப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

இந்தக் கும்பலிடமிருந்து 3.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள எக்ஸ்டசி பவுடர், RM59,200 மதிப்புள்ள 296 கிராம் கெட்டமைன் மற்றும் RM1,320 மதிப்புள்ள எராமின் 5 மாத்திரைகள் 13.2 கிராம் (66 மாத்திரைகள்) ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவை 80,946 போதைப்பித்தார்கள் பயன்படுத்த போதுமானவை என்றார் அவர். மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு போதைப்பொருள் ரீபேக்கேஜிங் கருவிகள், RM30,000 மதிப்புள்ள கார், RM2,761 ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் அனைவரும் ஜனவரி 11 முதல் இன்று வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் 012-2087222 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here