PH வேட்பாளருக்கு வாக்களிப்பு பாவம் என்று கூறியது தொடர்பில் முஹிடினிடம் விசாரணை

கோலாலம்பூர்: பூலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் பாவ செயல் ஃபத்வா ஆகிய  கருத்துகள் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினால்  தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். முஹிடினுக்கு எதிராக நேற்று போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆம், எங்களுக்கு (முஹிடின் மீது) ஒரு புகார் கிடைத்தது. நாங்கள் (விஷயத்தில்) விசாரணையை மேற்கொண்டோம். சட்டப் பிரிவு 505 (b) இன் கீழ் எச்சரிக்கை மற்றும் பொது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கையை வெளியிட்டதற்காக வழக்கு விசாரிக்கப்படும் என்று ரஸாருதீன் கூறினார்.ந்தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 223 இன் படியும் விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக, வரவிருக்கும் பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் PH வேட்பாளர் சுஹாய்ஸான் கயாட்டிற்கு வாக்களிப்பது ஹராம் என்று முன்னாள் பிரதமர் அறிவித்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவியது. சனிக்கிழமை இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஜோகூர் பாருவில் உள்ள நுசா பெஸ்தாரியில் உள்ள PN இன் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது முஹிடின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here