சிறிய வேலை; பெரியத் தொகை என்ற விளம்பரத்தால் கவரப்பட்டு 30,000 ரிங்கிட்டை இழந்த பாலர் பள்ளி ஆசிரியை

ஜோகூர் பாரு: 28 வயதான மழலையர் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டு 30,759  ரிங்கிட் இழப்பை சந்தித்தார். ஜோகூர் பாரு  செலத்தான்   காவல்துறைத்தலைவர்  உதவி ஆணையர் ரவூப் செலாமட் கூறுகையில், ஜனவரி 15 ஆம் தேதி சிறிய பணிகளுக்கு அதிக கமிஷன்கள் வழங்கும் பகுதி நேர வேலை விளம்பரத்தால் அந்தப் பெண் ஈர்க்கப்பட்டபோது இந்த சம்பவம் தொடங்கியது. பாதிக்கப்பட்டவர் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்தார். இது ஒரு தொலைபேசி எண்ணுக்கு இட்டுச் சென்றது. பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு லாசாடா கணக்கை அணுக மற்றொரு இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்தப் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டன. மேலும் எந்தவொரு கட்டணமும் வாக்குறுதியளிக்கப்பட்ட கமிஷன்களுடன் திருப்பித் தரப்படும் என்று கூறப்பட்டது என்று அவர் சனிக்கிழமை (ஜனவரி 18) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஜனவரி 15 முதல் ஜனவரி 16 வரை, பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 32,039 ரிங்கிட்டை  11 பரிவர்த்தனைகள் மூலம் மேற்கொண்டதாக  அவர் மேலும் கூறினார்.

கமிஷன் தொகையாக 1,280 ரிங்கிட்டை மட்டுமே பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவரிடம் கூடுதல் பணம் செலுத்துமாறு பலமுறை கேட்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஜனவரி 17 அன்று செத்தியா இந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று அவர் கூறினார். “Semak Mule CCID” தளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைகளில், பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வங்கிக் கணக்குகளில் ஒன்றில் மோசடி தொடர்பான முந்தைய பதிவு இருப்பது தெரியவந்தது.

மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் தொடர்புகளைக் கையாளும் போது எச்சரிக்கையாக இருக்கவும், நம்ப முடியாத அளவிற்கு வழங்கப்படும்  சலுகைகளை தவிர்க்குமாறும் ஏசிபி ரவூப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here