சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் காற்று… அறிவியல் காரணம் தெரியுமா!

சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருக்கும் காற்றினால் நாம் அவர்களை எப்போதும் திட்டுகிறோம். ஆனால், அதற்கு பின்னர் உள்ள அறிவியல் உண்மை தெரிந்தால், நாம் இனி திட்டவே மாட்டோம்.

நாம் சிப்ஸ் பாக்கெட்டை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளே நிறைய இருக்கும் என்று எதிர்பார்ப்போம். ஆனால், பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிதாக ஐந்து ஆறு, கொஞ்ச தூள் இருக்கும். இதைப் பார்த்து சிறுவர்கள் மட்டுமல்ல அனைவருமே ஏமாந்துப் போவோம். இது ஒரு காலத்தில் நடந்ததுதான். ஆனால், இப்போது இது நமக்கு பழகிவிட்டதே. எப்படியும் கொஞ்சம்தாம் இருக்கும்.

ஆகையால் பெரிய பாக்கெட் வாங்குவோம் என்று முடிவெடுப்போம். அப்படிருந்தும் நாம் அந்த லேஸ் தயாரிப்பு நிறுவனத்தை திட்டத்தான் செய்கிறோம்.

ஆனால், ஏன் அவர்கள் நம்மை ஏமாற்ற வேண்டும்? இந்த காற்று விஷயத்தை அறிந்து நாம் வாங்குவதை குறைத்துவிட்டோமே, அது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அது அவர்களுக்கு நஷ்டத்தை கொடுக்காமலையா இருக்கும்? அதைப்பற்றி அவர்கள் நினைக்காமலா இருப்பார்கள்?

இப்படி உங்களுக்கு யோசிக்கத் தோன்றவில்லையா?

சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்பும் முறைக்கு Slack fill என்று பெயர். காற்று நிரப்புவதற்கு முதல் காரணம், சிப்ஸ் பாக்கெட்டுகளை பல இடங்களில் மாறி மாறி கடைகளுக்கு வருகிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்படும் சிப்ஸ்கள் உடையாத வண்ணம் காற்று நிரப்பப்படுகிறது. காற்று நிரப்பினால், உள்ளே இருக்கும் சிப்ஸ் மாறி மாறி மோதினாலும் அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது.

நைட்ரஜன் இருக்கும்போது அந்த சிப்ஸுடன் எந்த ரியாக்ஸனிலும் ஈடுபடாமல் இருக்கும். இதனால் சுவையும் மாறாமல், கெடாமல் வெகுநாட்கள் இருக்கும்.

இரண்டாவது காரணம் பார்ப்போம்.

இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளுக்கு உள்ளே ஆக்ஸிஜன் மற்றும் நிரப்படுவது கிடையாது. நைட்ரஜன் கேஸும் நிரப்பப்படுகிறது. வெறும் ஆக்சிஜன் மட்டும் உள்ளே இருந்தால் அது சிப்ஸுடன் சேர்ந்து பாக்டீரியாவை உருவாக்கி சிப்ஸின் நிறத்தை கூட மாற்றி அதன் சுவையை இழக்க வைத்து கெட்டு போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என கூறப்படுகிறது.

இப்போது இந்த காரணங்கள் அறிந்த பின்னர், சிப்ஸ் நிறுவனங்களைத் திட்டுவீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here