எம்.எஸ். மலையாண்டி
பட்டதாரிகளான ஆண்களை விட பெண்கள் பெறும் சம்பள விகிதம் 900 ரிங்கிட் வரை குறைவாக இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மலேசியாவின் வளர்ச்சியில் பெண்களின் மிக முக்கியமான பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் செயல்திறன் அடிப்படையில்தான் சம்பள விகிதம் அமைய வேண்டுமே தவிர பாலினம் அடிப்படையில் அல்ல
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சம்பள விகித இடைவெளி மீதான விவகாரம் தற்போது பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத் திற்குக் கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படும் என மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி குறிப்பிட்டிருக்கின்றார்.
அதே சமயம் இந்த விஷயம் தொடர்பில் மனிதவள அமைச்சு தரப்பினருடனும் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித் திருக்கின்றார். சம்பள விவகாரம் உண் மையில் மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் இல்லை. இது அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையிலான கெசுமா எனப்படும் மனிதவள அமைச்சின் கீழ் உள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் பெண்களும் சம்பந்தப்பட்டிருக்கும் காரணத் தினால் தமது அமைச்சும் அவர்களுக்காக குரல் கொடுக்கிறது என்று நான்சி) தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இடைவெளி ஏன்? பட்டப்படிப்பை முடித்து பட்டதாரிகளாக ஆகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சம்பள விகித இடைவெளி பெரிதாகி வருவது குறித்து சில மகளிர் அமைப்புகளும் கவலை தெரிவித்திருக் கின்றனர். ஆண் பட்டதாரிகளும் சரி – பெண் பட்டதாரிகளும் சரி, இந்த இரண்டு தாப்பினருமே நிகரான கல்வித்தகுதியை பெற்றுள்ளனர்.
அப்படி பார்க்கும்போது இவர்களுக்கு சுமக்கிராள சம்பள விகிதமே வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமானது கூட. ஆண்பட்டதாரிகளுக்கும் பெண் பட்டதாரிகளுக்கும் இடையே சம்பள வித இடைவெளி இருக்கக்கூடாது என்பது அமைச்சர் நான்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த விஷயத்தை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆழமாக பரிசீலனை செய்து இந்த இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று மகளிர் நல அமைப்புகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.
சம்பளம் பற்றிய புள்ளி விவரம் தேசிய புள்ளி விவரத்துறை வெளியிட்டிருக் கும் 2023ஆம் ஆண்டு நாட்டிலுள்ள பட்டதாரி கள் பற்றிய புள்ளி விவர அறிக்கையில் ஆண் பட்டதாரிகளும் பெண் பட்டதாரிகளுக்கும் இடையே நிலவும் சம்பள விகித இடைவெளி எந்தளவிற்கு உள்ளது என்பதை விவரித்துள்ளது. சமநிகரான கல்வித்தகுதியைப் பெற்ற பெண்ட பட்டதாரிகளும் ஆண் பட்டதாரிகளுக்கும். இடையே சம்பள விகித இடைவெளி என்பதை இந்த புள்ளி விவரம் விவரித்துள்ளது.
அந்த அடிப்படையில் ஆண் பட்டதாரிகள் பெறக்கூடிய சம்பளத்தை விட பெண் பட்டதாரிகள் கிட்டத்தட்ட 900 ரிங்கிட்டிற்கும் குறைவாகதான் சம்பளத்தை பெறுவது தெரிய வருகிறது. இந்த இடைவெளி இனியும் நீடிக்கக் கூடாது என்பது மகளிர் நல அமைப்புகளின் நியாயமான கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
முதலாளிகளின் நிலைப்பாடு இந்த நிலையில் தொழிலாளர்களின் சிறந்த பங்களிப்பு, செயல் திறன், உற்பத்தி திறள் ஆகிய அடிப்படையில் முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்கள் சம்பளம் பெற வேண்டுமே தவிர பாலினம் (ஆண் – பெண்) அடிப்படையில் அல்ல என்று மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் (எழுஇப்) டத்தோ டாகட சைட் உசேன் சைட் உஸ்மான் தெளிவுபடுத்தி இருக்கிறார். கல்வித் தகுதி. தொழில் ஆற்றல், தொழிலாளியின் அனுபவம் ஆகிய அனைத்தும் ஆண் – பெண் என இரு தரப்பினருக்கும் சமமானதே என்ற கருத்தினையும் அவர் வலியுறுத்தினார்.
ஆகவே ஆண் -பெண் அடிப்படையில் சம்பளம் வழங்கும் நடைமுறையை அல்லது கொள்கையை மலேசிய முதலாளிகள் சம்மேளளம் ஆதரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த நிறுவனத்திலும் பாலினம் அடிப்படை யில் சம்பள நடைமுறை ஒருவேளை இருந்தால் முதலாளிகள் அதனை சரி செய்ய வேண்டும். என்பது சைட் உசேன் கோரிக்கையாகும்.
பெண்களின் பங்களிப்பு மலேசியாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றனர் என்பதனை அனைத்துத் தரப்பினரும் அங்கீகரிக்க வேண்டும்.
அதோடு கலை, கலாச்சாரம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சி நிலையை நாடு அடைவதற்கு பெண்களின் பங்கும் மிக முக்கிய திறவுக்கோலாக அமைந்துள்ளது. அரசியல், நீதி பரிபாலனத் துறை, அரசாங்க நிர்வாகம் போன்றவற்றில் மலேசியப் பெண்கள் செல்வாக்கு நிறைந்த அல்லது வலிமைமிக்க உயர்நிலை பதவி களை வகிக்கின்றனர். பாலிளம் அடிப்படை யிலான எதிர்கால சவால்களை சமாளிக்க வருங்கால தலைமுறையினருக்கு இது உந்துதல் சக்தியாகவும் உள்ளது. அதே சமயம் குடும்ப வளர்ச்சியிலும் பெண்கள் ஆற்றும் பங்கு சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது. வீட்டிலும் சரி – வேலை செய்யும் இடத்திலும் சரி, பெண்களின் கடுமையான உழைப்புக்கும் செயல்திறனுக்கும் ஏற்ப அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கும் கொள்கை அவசியமாகிறது.
சட்ட திருத்தம் சம்பள நடைமுறையிலும் மற்ற விஷயங்களிலும் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்பதற்குதான் 2021இல் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 8 (2) இல் திருத்தமும் செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிலுள்ள பெண்களின் உரிமையை முழுமையாக பாது காக்க முக்கியத்துவம் வாய்ந்த வியூகமாக அமைந்தது.
இந்த நாட்டிலுள்ள வேலையிடங்களில் பாகுபாடுகளை நீக்க 1955ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தில் இந்த ஷரத்து இணைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி இது நடப்பிற்கு வந்தது. வேலையிடத்தில் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்று பெண்கள் உளார்ந்தால் அவர்கள் சொக்சோ தலைமை இயக்குநரிடம் புகார் செய்யவும் இந்த சட்டவிதி வகை செய்கிறது.
1997ஆம் ஆண்டு அனைவருக்கும் நிகரான சம்பளம் என்ற நிலைப்பாடு தொடர்பில் ஐஎல்ஓ எனப்படும் அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் ஒரு சாசனம் நிறைவேற்றப்பட் டது. இது மலேசியாவும் அங்கீகரித்துள்ளது. ஆகவே பாலினம் அடிப்படையிலான சம்பளக் கொள்கை நீக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.