ஆசியான் தலைமைத்துவம் -ஒரு பார்வை

ஆசியான் தலைமை என்றால் என்ன? தலைமை ஏற்கும் நாட்டின் கடமைகள் என்ன? எவ்வாறு ஓர் உறுப்பு நாடு தலைமைக்கு தேர்வு செய்யப்படுகிறது என்பதை இங்கு அலசுவோம்.

ASEAN 2025 LOGO AND THEME - Home - High Commission of Malaysia, Pretoria

ஆசியான் உறுப்பு நாடுகளின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுழல் முறையில் ஆசியான் தலைமைத்துவம் ஒப்படைக்கப்படுகிறது.

Great expectations as Malaysia is set to head Asean in 2025 | The Straits  Times

தலைமை பொறுப்பை ஏற்கும் நாடு ஆசியான் உச்சநிலை மாநாடு மேலும் அதன் தொடர்பான மாநாடுகளை நடத்தும். இது தவிர ஆசியான் ஒருங்கிணைப்பு மன்றம், மூன்று ஆசியான் சமூக மன்றங்கள், தொடர்புடைய ஆசியான் துறை அமைச்சரகங்கள், சீனியர் அதிகாரிகள், நிரந்தர பணிக்குழு பிரதிநிதிகள் ஆகியவற்றின் கூட்டங்களையும் நடத்தும்.

Malaysia stresses Asean's great potential at WEF 2025 - Selangor Journal

தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் உறுப்பு நாடு, ஆசியான் சமூகத்தின் உயர்வு, மேம்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுக்கும். கொள்கை திட்டங்கள், ஒருங்கிணைப்பு, இணக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழி இப்பணிகள் நிறைவேற்றப்படும்.

Malaysia gears up for Asean leadership with focus on inclusivity and  sustainability | The Star

ஆசியானை பாதிக்கும் நெருக்கடி மிக்க நிலைகள், அவசர விவகாரங்கள் ஆகிவற்றுக்கு தக்க சமயத்தில் ஆக்கப்பூர்வமான பதில் அளிப்பதையும் நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்வதும் ஆசியான் தலைமையின் தலையாய கடமைகளில் அடங்கும். விரைந்து தீர்வு காணும் ஆற்றலையும் தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டும்.

Malaysia Mampu Menjadi Tuan Rumah Terbaik Sempena Sidang Kemuncak ASEAN  2025 - Malaysiaaktif

ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு அன்வார் மிகவும் பொறுத்தமானவர். உலக அரங்கில் மிகத் துணிவுடன் குரல் கொடுக்கும் அன்வார், உலகத் தலைவர்களின் அன்புக்குரிய தலைவராக திகழ்வது ஆசியான் தலைமைக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.

ஆசியான் தலைமையை ஏற்றிருக்கும் நாடுகள்:

2011 – இந்தோனேசியா

2012 – கம்போடியா

2013 – புருணை

2014 – மியான்மார்

2015 – மலேசியா

2016 – லாவோஸ்

2017 – பிலிப்பைன்ஸ்

2018 – சிங்கப்பூர்

2019 – தாய்லாந்து

2020 – வியட்நாம்

2021 – புருணை

2022 – கம்போடியா

2023 – இந்தோனேசியா

2024 – லாவோஸ்

2025 – மலேசியா

(குறிப்பு: ஒவ்வோர் ஆண்டும் ஆசியான் தலைமைத்துவம் மாறும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here