கணவரின் நீதிமன்றக் கட்டணத்தை குறைப்பதாக உறுதியளித்து, மனைவியிடம் RM95,000 மோசடி

ஷா ஆலம்:

நீதிமன்றத்தில் தனது கணவர் எதிர்கொள்ளும் வழக்கிற்கான கட்டணங்களை குறைப்பதாகக் கூறி, நம்பவைத்து அவரது மனைவியிடம் RM95,180 மோசடி செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.

ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரியும் 33 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணை, சந்தேக நபரான பெண்ணை 2024 டிசம்பரில் சந்தித்ததாகவும், அவர் தனது கணவருக்குள்ள சட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உதவி வழங்கியதாகவும் கூறினார்.

“சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை பலமுறை சந்தித்து, விஷயத்தைத் தீர்க்க உதவ முடியும் என்று அவரை நம்ப வைத்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர் இறுதியில் ஒப்புக்கொண்டு, சந்தேக நபர் வழங்கிய இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM95,180 ஐ வைப்பிலிட்டார் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் சந்தேக நபர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை பாதிக்கப்பட்டவர் பின்னர் உணர்ந்ததாகவும், பின்னர் அவர் கடந்த திங்களன்று காஜாங்கில் ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் குறித்த புகார் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் ஹுசைன் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here