ஜப்பானில் காணாமல்போனதாக கூறப்பட்ட மலேசிய மாணவி பாதுகாப்பாக உள்ளார்

தோக்கியோ:

ஜப்பானின் ஹிரோஷிமாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய மாணவி பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது மகள் பத்திரமாகவும் நலமுடனும் இருப்பதாக ஜப்பானில் உள்ள மலேசிய தூதரக அலுவலகம் தகவல் அளித்ததாக அம்மாணவியின் தாயார் நூர் அஃப்ஸான் அப்துல் ரசாக் கூறினார்.

இன்று வியாழக்கிழமை (ஜனவரி 30)
ஜப்பானில் உள்ள மலேசிய மாணவர் சங்கம் (MSAJ) அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குரே கோசனில் படிக்கும் 21 வயதான நூரின் ஹன்னானி ஹஃபிஸி கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here