அத்துமீறலைத் தடுக்க KTMB பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது

கெரெட்டாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB), எதிர்காலத்தில் தண்டவாளத்தில் அத்துமீறல்களைத் தடுக்க, குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில், கூடுதல் துணை போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும், செயல்பாட்டு வளாகங்களில் சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துவதற்கும், நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்துடன் (Apad) KTMB மேலும் ஈடுபடும் என்று தலைமை இயக்க அதிகாரி முகமட் ஜைன் மாட் தாஹா தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் அத்துமீறல் சம்பவங்களைத் தடுப்பதற்கும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் தடையற்ற ரயில் செயல்பாடுகள் எங்கள் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை KTM Komuter சேவைகளை சீர்குலைத்த சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், அதிகாரிகள் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

ஜாலான் கஸ்டம் நிலையத்திலிருந்து காலை 6.39 மணிக்கு புறப்பட்ட KTM Komuter ரயில் 2110, KM 34.734 இல் அத்துமீறல் செய்பவர்களுடன் மோதியதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மொத்தம் 200 பயணிகள் பாதிக்கப்பட்டு, துணை போலீஸ் அதிகாரிகள் மற்றும் KTMB ஊழியர்களுடன் கிளாங் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சுபாங் ஜெயா நிலையத்திற்கு ஒரு ஷட்டில் பேருந்தில் ஏறினர்.

இந்த சம்பவத்திற்கு KTMB மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும் ரயில் பாதைகளில் அத்துமீறல் ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here