டிரம்ப் அறிவித்திருக்கும் வரி அவசரப்பட முடியாது – அன்வார்

கோலாலம்பூர்:

மெரிக்க அதிபர் அறிவித்திருக்கும் வரி தொடர்பில் மலேசியா அவசரப்பட்டு செயல்படுவதை அல்லது பதில் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த வரி விதிப்பு குறித்து கவலை ஏற்பட்டிருப்பினும் அமெரிக்கா இன்னமும் மலேசியாவின் முக்கிய வாணிபப் பங்காளியாக இருக்கிறது என்று நாடாளுமன்ற மக்களவையில் அவர் தெரிவித்தார்.

 டிரம்ப் அறிவித்திருக்கும் சில முடிவுகளில் உறுதியான நிலைப்பாடு இல்லை என்பதால் நாம் இவ்விவகாரத்தில் அவசரப்படக்கூடாது என்று நிதி அமைச்சருமான அன்வார் . குறிப்பிட்டார். உதாரணமாக நேற்று முன்தினம்தான் இந்தக் கொள்கை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதேசமயத்தில் கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இந்த வரி விதிப்பை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்துவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார் என்று அவர் சொன்னார்.

எனவே அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக மேலும் சில கொள்கைகள் மாறலாம் அல்லது இந்த முடிவு நிலைநிறுத்தப்படலாம் என்று மக்களவையில் பாகான் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.

டிரம்பின் வரி விதிப்பு தாக்கத்தில் இருந்து பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கவிருக்கும் நிதி நடவடிக்கைகள் என்ன என்று குவான் எங் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த விவகாரத்தில் டிரம்பின் வரி விதிப்புக்கு எதிராக மலேசியா சீனா, கனடா, மெக்சிக்கோ நாடுகளுடன் கரம்சேருமா என்றும் குவான் எங் கேள்வி எழுப்பி இருந்தார்.

டிரம்பின் வரி விதிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் மெக்சிக்கோவும் கனடாவும் அமெரிக்க மீது வரி விதிப்பை அறிவித்தன. சீனாவும் இந்த வரி விதிப்பை எதிர்த்துப் பதிலடி கொடுப்பதற்கு உறுதி அளித்திருக்கிறது. மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட 25 விழுக்காட்டு வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்திருக்கும் நிலையில் சீனாவுக்கு விதிக்கப்பட்ட 10 விழுக்காட்டு வரி விதிப்பு குறித்து அந்நாட்டுடன் பேச இருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here