போலி சுடும் ஆயுதங்களை வைத்திருந்த ராணுவ அதிகாரி கைது

ஈப்போ, ஜாலான் தம்புன் அருகிலுள்ள சைட் புத்ரா (Syed Putra) முகாம் பகுதியில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 10க்கும் மேற்பட்ட போலி சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

34 வயது ராணுவ அதிகாரிக்கு இதற்கு முன்பு எந்த குற்றப் பதிவும் இல்லை.

சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, 1960 சுடும் ஆயுதச்சட்டம், 1958 வெடிபொருள், அபாயகர ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

உரிய அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் எந்தவொரு தனி நபரும் ஆயுதங்களை வைத்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்தது.

இந்த போலி ஆயுதங்களை பஹாங்கில் உள்ள ஒரு முகவரிடமிருந்து அவர் பெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here