கோத்தா மருடுவில் லேசான நிலநடுக்கம்

கோத்தா கினாபாலு:

கோத்தா மருது மாவட்டத்தில் இன்று காலை 10.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை கானா, தலந்தாங் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கம்போங் கானாவில் வசிக்கும் ஒருவர் தனது கிராமத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார், வீடு குலுங்கியபோது திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதாகக் கூறினார்.

அதைத் தவிர, அப்பகுதியில் உள்ள சில அலுவலக ஊழியர்கள் தங்கள் வளாகத்தில் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று இம்மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவான ஐந்து ஆண்டுகளின் பின் இந்த சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

இதுவரை, நிலநடுக்கத்தால் எந்த சேதமோ அல்லது விபத்துகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here