ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு சுகாதார ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நோயாளிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட டிக் டாக் வீடியோவில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.