சிரம்பான்:
போர்ட்டிக்சன் மாவட்டத்தில் உள்ள 11 கடற்கரைகளில் தனிப்பட்ட கூடாரங்கள் அமைப்பதற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டும் என்றும், தூய்மைப் பிரச்சினைகள் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் போன்ற விரும்பத்தகாத பிரச்சினைகளைத் தடுக்கவே இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுதீன் ஹருன் கூறினார்.
“விதிகள் எதுவும் இல்லையென்றால், குற்றச் செயல்களை தடுப்பது இன்னும் கடினமாக இருக்கும்.
உதாரணமாக “திடீரென, ஒரு கூடாரத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தால், இவ்வாறான கூடாரங்களை அமைக்க அனுமதித்ததற்காக நீங்கள் நிச்சயம் நகராண்மைக் கழக (PBT) உறுப்பினர்கள் மற்றும் மந்திரி பெசார் மீது குற்றம் சாட்டுவீர்கள்,” என்று, தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான தடை உத்தரவு குறித்த மக்களின் அதிருப்திக் கருத்துக்களுக்கு விளக்கமளித்தார்.