அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் பட்டையை கிளப்பிய ‘நாக்க முக்க’ பாடல்!

அமெரிக்க ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியின் ‘நாக்க முக்க’ பாடல் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தனது குத்துப் பாடல்களுக்குப் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது ‘நாக்க முக்க’, ‘மக்காலாயா’, ‘மஸ்காரா’ எனப் பல பாடல்கள் இப்போது வரையும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாமல் உள்ளது. அந்த வகையில், தற்போது இவரது ‘நாக்க முக்க’ பாடல் தமிழ்நாடு தாண்டி அமெரிக்க நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒலித்துள்ளது. அங்கும், பார்வையாளர்களை எழுந்து நடனம் ஆட வைத்துள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நகுல் நடிப்பில் ‘காதலில் விழுந்தேன்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாக்க முக்க’ பாடலுக்கு அப்போது பயங்கர ஹிட். இப்போது வரையும் அந்தப் பாடல் பலரையும் நடனம் ஆட வைத்து வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான ‘அமெரிக்கா காட் டேலண்ட்’ நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ‘வீ அன்பீட்டபிள்’ என்ற நடனக்குழு ‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளனர். இந்த நடனத்தைப் பார்த்த பார்வையாளர்களும் நடுவர்களும் இவர்களது நடனத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்த வீடியோக்களைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here