தீ விபத்தில் சிக்கி 4 பிள்ளைகள் உள்ளிட்ட 5 பேர் பலி

ஜாசின்,  உம்பாய் கம்போங் பெராங்கான் எனாமில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாலை 1.40 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், மெர்லிமாவ், பாடாங் டெமு தீயணைப்பு  மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் வந்தவுடன், 20×60 சதுர அடி பரப்பளவு கொண்ட பாதி பலகை வீடு 80% எரிந்திருப்பதைக் கண்டறிந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஐந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் ஆடவர் மற்றும் நான்கு குழந்தைகள். மற்றொருவர் தீயில் இருந்து உயிர் தப்பினார் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here