ரமழான் நோன்புக்காலத்தில் பகாங் அரசு ஊழியர்களின் வெள்ளிக்கிழமை வேலைநேரம் மதியம் 12.30 மணியுடன் முடிவடையும்- சுல்தான்

கோலாலம்பூர்:

மழான் நோன்புக்காலம் முத்துவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் பகாங் மாநில அரசு ஊழியர்களின் வேலை நேரம் மதியம் 12.30 மணியுடன் முடிவடையும் என்று, மாட்சிமை தங்கிய பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது அரச ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட அனுமதிப்பதுடன், வாரத்தின் புனிதமான நாளான வெள்ளிக்கிழமையை புனித ரமழான் மாதத்தில் கொண்டாடுவார்கள் என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 5 அன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.மேலும் “எல்லோரும் கட்டாயமான வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன், யாரும் அதைத் தவிர்க்க வேண்டாம்,” என்று பகாங் சுல்தான் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here