கோலாலம்பூர்:
ஜாலான் கிள்ளான் பந்திங்கின், 53வது கிலோமீட்டரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கடந்த சனிக்கிழமை (மே 24) பிற்பகல் 1 மணியளவில் சிப்பாங்கிலிருந்து பந்திங் நோக்கிச் சென்ற 30 வயதுடைய ஒரு பெண் ஓட்டிச் சென்ற SUV வாகனம் எதிர் பாதையில் நுழைந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று, கோலா லங்காட் மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி கூறினார்.
“SUV வாகனம் பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, அப்போது ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் குழந்தை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்றது.
“மோதலின் விளைவாக தம்பதியினரும் அவர்களது குழ்ண்தையும் சாலையில் வீசப்பட்டனர்,” என்று துணைத் தலைவர் முகமட் அக்மல்ரிசால் மேற்கோள் காட்டினார்.
அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்றும், சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்துவிட்டதாக பந்திங் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார் என்றும் அவர் சொன்னார்.
உயிரிழந்த தம்பதியர் சுமார் 20 வயதுடையவர்கள் என்றும், குழந்தைக்கு ஒரு வயது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என்றும், இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 4(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.











