திருடப்பட்ட 2 மணி நேரத்தில் செம்பனை எண்ணெய் டேங்கரைக் கண்டுபிடித்த போலீசார்

பத்து பஹாட்டில் உள்ள ஜாலான் லாபிஸ்-யோங் பெங்கில் நிறுத்தப்பட்டிருந்த செம்பனை எண்ணைய்  டேங்கரை திருடிய இரண்டு மணி நேரத்திற்குள் 41 வயது நபர் கைது செய்யப்பட்டார். ஜாலான் லாபிஸ்-யோங் பெங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனம் காணாமல் போனதைக் கண்டறிந்த பின்னர் டேங்கரின் உரிமையாளர் புகார் அளித்ததாக பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் ஷாருலானுார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார் என்று சினார் ஹரியான் தெரிவித்தார்.

தங்காக் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு காலை 10.50 மணிக்கு மலாக்காவின் ஜாசின், சுங்கை ரம்பையில் திருடப்பட்ட லோரியை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

வாகனத்தையோட்டி வந்த சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் 13 குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மெத்தம்பேட்டமைன் இருப்பதாகவும் ஷாருலானுார் கூறினார். அவர் ]மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். மோட்டார் வாகன திருட்டுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379A மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here