பிரச்சினைகள் தீர தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

நாம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டு இருப்போம். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும்

அந்த பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டுபிடித்து அதை செயல்படுத்தி அதில் வெற்றி பெற்றால் தான் அந்த பிரச்சினையிலிருந்து வெளியில் வர முடியும்.
ஒரு பிரச்சனையிலிருந்து வெளியே வந்தவுடன் பிரச்சினையே இல்லாமல் இருக்காது திரும்பவும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும். இப்படி பிரச்சினைக்கும் மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மால் வெளியில் வர முடியவில்லை என்பவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

எட்டு திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடிய  காலபைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் காலபைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் அந்த பிரச்சினை தீருவதற்குரிய தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த பிரச்சனை தீரும் என்றும் கூறி கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும் பலவிதமான பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டு இருப்பவர்கள் எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும்.பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் அஷ்டமி திதி என்பது தொடங்குகிறது. பொதுவாகவே அஷ்டமி திதி அன்று ராகு காலத்தில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அப்படி நடக்கக்கூடிய நேரத்தில் கால பைரவருக்கு வாசனை மிகுந்த பொருட்களை வாங்கி தருவதன் மூலமும் சிவப்பு நிற மலர்களை வாங்கி தருவதன் மூலமும் காலபைரவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். நம்முடைய தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய ஒரு பரிகாரத்தையும் நாம் அன்றைய தினம் செய்யலாம்.

இதற்கு நாம் மாலை நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம் அல்லவா? அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தையும் நாம் செய்யலாம். வீட்டில் காலபைரவரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக செய்யலாம். கால பைரவரின் படம் இல்லை என்றால் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை கால பைரவர் ஆக நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று கல் உப்பு மற்றொன்று மிளகு. கல்லுப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகவும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்க கூடியதாகவும் திகழ்கிறது. மிளகும் அதே போல் நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து நமக்கு நன்மைகளை தரக்கூடியதாக திகழ்கிறது. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிண்ணம் இல்லாத பட்சத்தில் ஒரு அகல் விளக்கை கூட இதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை அதில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு 8 மிளகுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மிளகையும் நாம் அந்த கல்லுப்பின் மீது வைக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொன்றாக வைக்கும் பொழுது “ஓம் கால பைரவரே போற்றி” என்று காலபைரவரின் மந்திரத்தை கூறிவிட்டு உங்களுடைய பிரச்சனைகளில் ஒரு பிரச்சினையை கூறி அது தீர வேண்டும் என்று அந்த மிளகை வைக்க வேண்டும்.
இப்படி எட்டு விதமான பிரச்சினைகளை கூறி இந்த மிளகை ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். எட்டு பிரச்சினைகள் இல்லை ஒன்று இரண்டு தான் இருக்கிறது என்றால் அந்த ஒன்றில் இரண்டு பிரச்சினைகளை மட்டுமே கூறியும் நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
அன்றைய தினம் முழுவதும் இது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த எட்டு மிளகுகளை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து சிவபெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். கல் உப்பை கால்படாத இடத்தில் தண்ணீரில் கரைத்து ஊற்றி விடுங்கள். எப்பொழுது நீங்கள் வேண்டி அந்த பிரச்சனை தீர்வுகிறதோ அப்பொழுது அந்த மிளகை எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய கோவிலில் இருக்கும் குளத்தின் போட்டு விட வேண்டும் அல்லது ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடலாம். ஒரு பிரச்சனை தீர்ந்தால் கூட ஒரு மிளகாய் கொண்டு போய் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை முழுமனதோடு நாம் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி தினத்தில் செய்யும் பொழுது விரைவிலேயே பிரச்சனைகள் தீர்வதற்கு கால பைரவர்  அருள் புரிவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here