ஆயர் சிலாங்கூரின் இ-பில் பிரச்சாரம் 40,000க்கும் அதிகமான பயனர்களைக் கவர்ந்துள்ளது

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப நீர் கட்டணத்தை கைப்பேசி வழி செலுத்துவதோடு மாதாந்திர பில்களை சரிபார்த்து கொள்ளும் இ-பில் திட்டத்தை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குறித்து அந்நிறுவனம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் வெற்றியாக 43,911 பயனர்கள் அதில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

பயனர்களின் நீர் கட்டண முறையை எளிதாக்கும் விதமாகவும் விரைவான முறையில் தங்களின் கட்டணங்களை செலுத்துவதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதோடு நீர் கட்டணம் உள்ளிட்ட இதர தகவல்கள் ஆயர் சிலாங்கூர் வழி பயனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தங்களின் 9.26 மில்லியன் பயனர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதில் ஆயர் சிலாங்கூர் உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் கார்ப்பரேட் தொடர்புத்துறைத் தலைவர் எலினா பாஸெரி தெரிவித்தார். 

Get your water bill via WhatsApp: Air Selangor

கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதி வரையில் 2,139,265 பேர் அதவாது 22.24 விழுக்காட்டினர் இ-பில் பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர். இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் 20 வரை யில் மேற்கொள்ளப்பட்ட இ-பில் பிரச்சாரத்தின்போது இ-பில் செயல் முறைக்கு மாறிய முதல் 30 பயனர்களைப் பாராட்டும் விதமாக ஜின்டெல் உடம்புபிடி மின்சரர நாற்காலியும் ஐபோன் 15 புரோவும் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, ஜிஎஸ்சி, வாட்ஸன், ஸ்கூப் உள்ளிட்ட பல உணவுக் கடைகளின் வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

இந்த பிரச்சாரம் ஆயர் சிலாங்கூரின் தொடர் நடவடிக்கைகளின் ஒன்றாக அமைகிறது. வசதி, டிஜிட்டல் மேம்பாடு சேவைகளை வழங்குவதில் பயனர்களுக்கு வழங்கு வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது. கடிதம் வாயிலான செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு ஆயர் சிலாங்கூரின் இ-பில் திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்துப் பயனர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக எலினா பாஸெரி கூறினார். இ-பில் முறையில் தங்களை பதிவு செய்து கொள்ள ஆயர் சிலாங்கூர் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.’ அல்லது wWw.airselangor.com என்ற அகப்பக்கத்தை பயனர்கள் நாடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here