போலித்துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆடவருக்கு RM1,800 அபராதம்

பாலிக் பூலாவ்:

இணையத்தில் வாங்கிய போலி துப்பாக்கியை வைத்திருந்ததற்காக, உணவு விநியோகம் செய்யும் ஒருவருக்கு, ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் RM1,800 அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமட் நசீர் ஓத்மான் (47) என்பவருக்கு மாஜிஸ்திரேட் சியா ஹியூ டிங் அபராதம் விதித்தார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி காலை 9 மணியளவில் இங்கு அருகிலுள்ள சுங்கை ஆரா, பாயான் லெபாஸ், ஜாலான் லிண்டாங் பயான் 6 இல் உள்ள ஒரு வீட்டில் சரியான உரிமம் இல்லாமல் போலி துப்பாக்கியை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“அவர் டிக்டோக் மூலம் ஆன்லைனில் போலி துப்பாக்கியை வாங்கினார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது 11 வயது மகனுடன் விளையாடுவதற்காக போலி துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அதனை வைத்திருப்பது குற்றம் என்று தெரியாது என்றும் அவர் சொன்னார்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும் அவருக்கு இரு மனைவிகள் மற்றும் ஆறு பள்ளி செல்லும் பிள்ளைகள் இருப்பதால் குறைந்த தண்டனை வழங்குமாறு குற்றவாளி தரப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, நீதிமன்றம் அதற்கு செவிசாய்த்து குறைந்த தண்டனையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here