ராமேஸ்வரி ராஜா
பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு ஊடக விருது விழா பிப்ரவரி 24 ஆம் தேதி கோலாலம்பூர் எம் ரிசார்ட் விடுதியில் நடைபெற்றது. அதில் ஒரே தமிழ் ஊடகமாக மக்கள் ஓசை பாராட்டு சான்றிதழை பெற்றது. அதனை டத்தோ பண்டார் பெட்டாலிங் ஜெயா டத்தோ முஹம்மட் ஸம்ரி சமிங்கோன் (Datuk Mohamad Zahri Samingon) எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி நடவடிக்கைகள் மற்றும் சமூக திட்டங்களை மக்கள் வரை கொண்டு சேர்க்க ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டி விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

“மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை மேலும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்ல, ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அது மேலும் தொடர வேண்டும். இந்த ஒத்துழைப்பின் மூலம், சிலாங்கூரின் சிறந்த உள்ளூராட்சி ஆட்சிக்குழுவாக MBPJ உருவாகும்,” என்று விருதுகளை மற்றும் சான்றிதழ்களை எடுத்து வழங்கி பேசிய அவர் வலியுறுத்தினார்.
ஊடக செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை MBPJ உணர்ந்துள்ளது. மக்களுக்கு நகராட்சி தொடர்பான தகவல்கள் மற்றும் திட்டங்களை எடுத்துச் செல்ல ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்றும் டத்தோ முஹம்மட் ஸம்ரி மாநகர தலைவர் மேலும் கூறினார்.
