மலேசியா – இந்தியா இணைப்பில் புதிய அத்தியாயம் கையெழுத்து

(ராமேஸ்வரி ராஜா)

உலக உபரி மின்னியல் தயாரிப்புத் துறையில் மலேசியாவின் விநியோகத்தை வலுப்படுத்த Advanced Semiconductor Academy of Malaysia – ASEM, Institute of Technology Madras – IIT Madras Global ஆகியவற்றிற்கு இடையே விவேக பங்காளித்துவம் ஏற்படுத்தப்பட்டது. ASEM-IIT மெட்ராஸ் கூட்டணி மூலம் சிலாங்கூர் தொழில்நுட்ப மையமாகிறது

உலக உபரி மின்னியல் தயாரிப்புத் துறையில் மலேசியாவின் விநியோகத்தை வலுப்படுத்த Advanced Semiconductor Academy of Malaysia – (ASEM), Institute of Technology Madras – (IIT Madras Global), ஆகியவற்றிற்கு இடையே விவேக பங்காளித்துவம் ஏற்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இதன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று இரு தரப்பும் கையெழுத்திட்டன. இது மலேசியாவை உலக குறைகடத்தி (semicon- ductor) மதிப்புச் சங்கிலியை பலப்படுத்தும், மூலோபாய கூட்டுறவை உருவாக்குகின்ற நிலைக்கு உயர்த்தும் ஒரு தூரநோக்கு கூட்டணியாகும்.

இந்த ஒப்பந்தம் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (Selangor Information Technology and Digital Economy Corporation – Sidec) நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. இதன் மூலம் மலேசியா, அமெரிக்கா, சீனா, தைவான் ஆகிய நாடுகளின் மீது இருக்கும் சார்பைக் குறைத்து, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரைச் செல்கள் சந்தையில் தன் இடத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

ஷா ஆலமில் உள்ள மாநில செயலகத்தில் நடைபெற்ற கையெழுத்திடும் இந்நிகழ்வு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம், நகர்ப்புற இயக்கம், நியமிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர் வோங் ஸி ஹான் உள்ளிட்ட தொழில், கல்வித் துறை தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டாண்மையின் கீழ், 2026ஆம் ஆண்டில் இரண்டு முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன:
1. RISC-V அடிப்படையிலான பட்ட மேற்படிப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம் – உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் RISC-V தொழில்நுட்பத்தில் மலேசிய பொறியாளர்களுக்கு நவீன வடிவமைப்பு, சரிபார்ப்புத் திறன்களை வழங்கும்.

2. மாணவர் பரிமாற்றம், இணைந்த சான்றிதழ் திட்டம் யுனிசெல் (UNISEL) பல்கலைக்கழகத்துடன் இணைந்து மின்சாரம், மின்னணு பொறியியல் பாடத்திட்டத்தை மேம்படுத்தி, மாணவர்களுக்கு உள்ளூர் பட்டத்துடன் IIT மெட்ராஸ் இணைந்த சான்றிதழையும் வழங்கும்.

இந்தத் திட்டங்கள் 2026இல் சுமார் 350 பங்கேற்பாளர்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூரை உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முன்னேற்றுவது எங்கள் நோக்கமாகும். இந்தியாவுடன் எங்கள் நோக்கம் தெளிவானதாக உள்ளது.  இந்தியா உலகின் சிப் வடிவமைப்பாளர் பொறியாளர்களில் 20 விழுக்காட்டிற்கும் மேலானவர்களைக் கொண்ட நாடாகும்.

IIT மெட்ராஸ்’உடன் இணைவதானது எங்கள் மாணவர்களுக்கு உலகத்தரமான புதுமைக்கு நேரடி அணுகலை வழங்கும் என்று சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம், நகர்ப்புற இயக்க நிர்வாக உறுப்பினர் வோங் ஸி ஹான் தெரிவித்தார்.
மேலும், IIT Madras Global Research Hub மலேசியாவில் உருவாக்கப்படும் வாய்ப்பும் ஆராயப்படுகிறது. இது இந்தியா, தைவான், சீனா போன்ற நாடுகளின் ஆழ்ந்த தொழில்நுட்ப (deep-tech) நிறுவனங்களை ஆசியான் பிராந்தியத்துடன் இணைக்கும் மென்மையான தரையிறங்கும் தளம் ஆக இருக்கும்.

ASEM, 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை 1,200 மாணவர்களைப் பயிற்றுவித்து, 65க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண்மை அமைத்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 பொறியாளர்களை உலகளவிலான திறன்களுடன் உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணி, நவம்பரில் நடைபெறவுள்ள Malaysia IC Design Park 2 திறப்பு விழாவிற்கு முன்னோட்டமாகும். இது சைபர்ஜெயாவில் தொடங்கப்படவுள்ள ஓர் உயர் தொழில்நுட்ப மையமாகும்.

மலேசியா தனது அரைச் ‘செல்’கள் துறையில் தன்னிறைவு, திறமை, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் வழியே புதிய யுகத்தை நோக்கி முன்னேறுகிறது எனவும் இந்த நிகழ்வில் பேசப்பட்டது.       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here