மகளிர் தினம்: பெண் சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடியின் சூப்பர் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று தனது 119-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, “உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டில் நாடு முழுவம் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். உத்தரகாண்ட் தற்போது நாட்டில் வலுவான விளையாட்டு சக்தியாக வளர்ந்து வருகிறது.

இது விளையாட்டின் சக்தி. இது தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் முழு மாநிலத்தையும் மாற்றுகிறது. இது எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்கு பாராட்டுகிறேன். 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும். தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை ஊக்குவிக்கும் விதமாக எனது சமூக வலைதள கணக்குகள் ஒருநாள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும். மகளிர் தினத்தன்று மோடியின் சமூக வலைதள பக்கங்களில் மகளிர் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்.

மாணவர்கள் எந்தவித பதற்றமில்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். உடல் பருமன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. சமையல் எண்ணை குறைப்பு உள்ளிட்டவை மூலம் உடல் பருமனை தவிர்க்கலாம். உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமாக திகழ முயற்சி செய்ய வேண்டும்,” என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here