மரம் வளர்க்க வேண்டும் என்று பலரும் கூறி இருக்கிறார்கள். மரம் வளர்ப்பதன் மூலம் நம்முடைய வாழ்நாள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மாசு நிறைந்த இந்த உலகத்தில் மரங்களால் மட்டுமே நம்முடைய சுவாசத்தை காக்க முடியும் என்றும் பலருக்கும் தெரியும். இருப்பினும் மரம் வளர்ப்போம் என்ற எண்ணம் அவர்களுடைய மனதிற்குள் வருவதில்லை. மரங்களில் பல மரங்கள் சத்துக்கள் நிறைந்த மரங்களாக திகழ்கின்றன.
அந்த மரங்களில் இருந்து வரக்கூடிய சுவாசக்காற்றை நாம் சுவாசிப்பதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் மகாசிவராத்திரி நாளன்று எந்த மரத்தை நட்டு வளர்த்தால் செல்வ வளம் பெருகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் இல்லாத வாழ்க்கை வாழ ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கும் கடன் சுமைக்கும் காரணமாக திகழ்வது அவர்களுடைய கர்ம வினைகளே. அப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்க வேண்டும் என்றால் நம்மால் இயன்ற அளவுக்கு மற்ற உயிர்களுக்கு தான தர்மங்களை செய்ய வேண்டும் உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறுவதும் உண்டு.
அதனால் தான் பலரும் சிறப்பு மிகுந்த நாட்களில் அன்னதானத்தை செய்வார்கள். ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழக்கூடிய உணவை தருவதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்வதன் அதன் மூலம் நம்முடைய கர்ம வினை தீரும் என்று கூறப்படுகிறது.
உணவு இருந்தால் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடையாது அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை நாம் தரவேண்டும். அப்படி இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களும் வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மரங்கள். மரங்களை நாம் வளர்ப்பதன் மூலம் மனிதர்களாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் சுவாசிப்பதற்கு தேவையான சுவாசக்காற்று கிடைக்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் பறவைகள் கூடு கட்டுவதற்கும் அதே சமயம் கால்நடைகள் இழைப்பாறுவதற்கும் இந்த மரங்கள் உறுதுணையாக இருக்கின்றன. மேலும் சிறு சிறு பூச்சிகள் வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் தருகிறது. அதனால் நாம் மரத்தை நட்டு வளர்த்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் அந்த மரம் வளர்வதற்கு இணையாக கரைந்து கொண்டே தீரும் என்றும் செல்வ வளம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட மரங்களை சிறப்பு மிகுந்த சிவராத்திரி அன்று சிவன் ஆலயத்தில் நாம் நட்டு வளர்த்தோம் என்றால் நமக்கு அளப்பரியா நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்குரிய வில்வமரம், வன்னி மரம் இந்த இரண்டு மரங்களை மரக்கன்றுகளை வாங்கி சிவாலயத்தில் சிவராத்திரி அன்று நட்டு தொடர்ச்சியாக அந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருவதன் மூலம் பலவிதமான நன்மைகள் உண்டாகும்.
இதோடு மட்டுமல்லாமல் அம்பிகைக்கு உகந்த வேப்ப மரத்தையும் நாம் நட்டு வளர்க்கலாம். இந்த மூன்று மரங்களில் எந்த மரத்தின் கன்று நமக்கு கிடைக்கிறதோ அந்த மரக்கன்று வாங்கி நடுவதோடு மட்டுமல்லாமல் தினமும் அதை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்க வேண்டும். இதை சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் வைத்து நாம் வளர்க்கலாம்.