கடின உழைப்பும், விடாமுயற்சியும் வெற்றியை தருமா? புதிய பட்டதாரிகளின் சிந்தனையில் ஆர்ப்பரிக்கும் முக்கியமான கேள்விகளில் ஒன்று.
இந்த கேள்விக்கான பதிலை நேரில் உணர்ந்த மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண் சார்ட்டர்ட் அக்கவுண்டன் Chartered Accountent சான்றளிக்கப்பட்ட கணக்காளர், தனது வாழ்க்கை அனுபவத்தில் நிரூபித்துள்ளார்.
தனது முதல் வேலையை வெறும் 2,800 ரிங்கிட் சம்பளத்துடன் தொடங்கிய அவர், பத்து ஆண்டுகளில் 20,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
சமீபத்தில், malaysiabestie என்ற இன்ஸ்டாகிராம் பயனர் அவருடன் நடத்திய ஒரு நேர்காணலில், அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துள்ளார்.
கணக்கியல் தணிக்கை நிறுவனம் ஒன்றில் ஆடிட்டராக தனது பயணத்தை தொடங்கிய அவர், நீண்ட நேரம் வேலை செய்தும், கடினமான பணிச்சுமையை எதிர்கொண்டும், விரக்தியடையாமல் முன்னேற முயன்றார்.
புதிய பட்டதாரிகளுக்கான அவரது முக்கியமான அறிவுரை “கற்றலை ஒருபோதும் நிறுத்தாதீர்கள், அனுபவத்தை ஈட்டுங்கள் நினைத்ததைவிட உயர்வீர்கள் என்று கூறி சாதாரண பட்டதாரி தனது விடாமுயற்சி மூலம் ஓர் உயர்ந்த நிலையை எட்டியதற்கான சாட்சியாக திகழ்கிறார்.








