கோத்த கினபாலு: கம்போங் லோக் போனு ஜாலன் செபாங்கரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார். சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அதிகாலை 4.32 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், கோத்த கினபாலு தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 பணியாளர்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குழு, நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு புதைந்திருப்பதைக் கண்டறிந்தது.
இரண்டு பேர் அந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணை, குழுவினர் இடிபாடுகளில் இருந்து மீட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது மகன் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அந்தத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், காலை 7 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அது கூறியது.









