நெகிரி செம்பினாலில் தேர்தல் முறைகேடு தொடர்பான 83 போலீஸ் புகார்கள் பதிவு

சிரம்பான், ஆகஸ்ட்டு 1:

வேட்புமனுத் தாக்கல் செய்த நாளிலிருந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக மொத்தம் 83 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன என்று நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைவர், துணை ஆணையர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசாஃப் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார்களில் பெரும்பாலானவை வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கான அனுமதியைப் பெறத் தவறிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார்.

அதனைத் தவிர்த்து காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பாக ஜெம்போலில் வேட்பாளரின் சுவரொட்டி சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறை ஒரு அறிக்கையை பெற்றது.

“இப்புகார்கள் தவிர, கடந்த மூன்று நாட்களாக எந்த பிரச்சனைகளுமின்னறி பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டன,” என்று அவர் இங்கு மாநில போலீஸ் சந்திப் பின்போது கூறி னார்.

காவல்துறையினர் கூட்டங்களில் நேரடியாக  இருப்பதன் மூலம் பிரச்சாரங்களை கண்காணிப்பார்கள் என்றும், இந்த கண்காணிப்பு நடவடிக்கை தேர்தலின் கடைசி நாள் வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அனைத்து வேட்பாளர்களும் தங்களது பிரச்சார அனுமதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதுடன் அனைத்து பிரச்சாரங்களும் நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்  அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here