தெலுங்கில் முதல் படம்…வைரலாகும் சோனாக்சி சின்ஹாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை,பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

தற்போது சோனாக்சி சின்ஹா தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் ‘ஜடதாரா’. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படமாகும். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு சோனாக்சி சின்ஹாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ஜடதாரா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here