(கவின்மலர்)
பாரட் புந்தார்:
ஏறத்தாழ 20 லட்சம் ரிங்கிட் செலவில் திருப்பணி கண்ட பாரிட் புந்தார் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஏறத்தாழ 5 ஆயிரம் பக்தர்கள் புடைசூழ சீரும் சிறப்புமாக நடந்தேறியது என்று ஆலயத் தலைவர் ஆ.சுந்தரநகுளன் தெரிவித்தார்.
பேராக் கிரியான் மாவட்ட தலைமைப் பட்டணமாக திகழும் பாரிட் புந்தாரில் அமைந்துள்ள மாவட்டத்தின் பெரிய திருமுருகன் ஆலயமாக திகழும் இந்த ஆலயத்தின் நன்னீராட்டுப் பெருவிழாவை பிரதிஷ்டா திலகம்,கும்பாபிஷேக ரத்னா சிவ ஆகம கிரியா பூஷணம் சிவஸ்ரீ ஆனந்தவர்த்தன அகோர சிவாச்சாரியார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் சிவாச்சாரியார்களும் நடத்தித் தந்தனர் என்று அவர் சொன்னார்.
70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரிட் புந்தார் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்,1958 ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு தனது முதல் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.1995 ஆம் ஆண்டு 2 ஆவது
திருக்குட நன்னீராட்டு பெருவிழாவைக் கண்டது.
அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டுகளில் சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டங்களால் ஆலய வளாகத்தில் மட்டுமல்லால் ஆலயத்திற்குள்ளும் தண்ணீர் புக தொடங்கியதால் சட்டத்திலான தூண்கள் மக்கி கறையான பிடிக்கத் தொடங்கியது.அதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலும் புதிய ஆலயத்தை அமைக்கும் திட்டம் திட்டமிட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. என்றாலும் இடையில் கோவிட் -19 கொடுந்தொற்று பரவத் தொடங்கியதாலும் நிதி பற்றாக்குறையின் காரணமாகவும் ஏறத்தாழ 3 ஆண்டுகள் கட்டுமான பணிகள் தடைப்பட்டன என்று ஆலயப் பொருளாளர் எம்.சி.கார்த்திக் என்ற அண்ணாமலை தெரிவித்தார்.

பழைய கோயிலைவிட ஏறத்தாழ 5 அடிகள் உயர்த்தப்பட்டு இன் எழுதில் தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் ஏறத்தாழ 20 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஆலயத்தைக் கண்டு உள்ளூர் வெளியூர் மக்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் பாரிட் புந்தார் வாசிகள் பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்த்தோடு ஆலய நிர்வாகத்தினரைப் பெரிதும் பாராட்டினர்.

ஆலயத் தலைவர் ஆ.சுந்தரநகுளன் பொருளாளர் எம்.சி.கார்த்திக் இருவரும் ஆலய நிர்வாகத்தினரின் சார்பில் நனகொடையாளர்களுக்கும் செலவேற்பாளர்களும் அனைத்து வகையிலும் உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நன்றியைப் புலப்படுத்திக் கொண்டனர்.மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத்துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் உட்பட பல பிரமுகர்கள் பெருமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.





















