திருப்பதி,திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டி ருந்தன.அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் சாலையையொட்டி வந்தது. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.மேலும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. செல்போன்களில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் யானைகள் நடைபாதை வழியாகவோ அல்லது வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவோ வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.