மாரடைப்பை கண்டுபிடிக்கும் செயலி; 14 வயது சித்தார்த் சாதனை

மாரடைப்பை முன்கூட்டியே 96 விழுக்காடு துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய செயலியை 14 வயது சித்தார்த் என்னும் சிறுவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த செயலி உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழை பெற்றுள்ளது.

இதனை அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் சோதனை செய்து பார்த்ததில் மாரடைப்பு முன்கூட்டியே கண்டறியப்பட்டது.

மேலும் சிர்காடியன் ஏ.ஐ. (circadian AI ) எனப்படும் இந்த செயலியை ஸ்மார்ட்போன் மூலம் இதயத் துடிப்பு ஒலியை பதிவுசெய்து, ஆரம்பகட்ட இருதய நோய்களை துல்லியமாக கண்டறியப்பட்டது.

ஒரேநாளில் சுமார் 700 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் தனது கண்டுபிடிப்பு குறித்து முதல்வருக்கு சித்தார்த் நேரடியாக விளக்கம் அளித்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here