ஏப்ரல் 1 முதல் மலேசிய ஏர்லைன்ஸ் விமானப் பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்த தடை

மலேசிய ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை Firefly, எம்எஎஸ் விங்ஸ்MASwings விமானப் பயணிகள் ஏப்ரல் 1 முதல் விமானப் பயணங்களின் போது தங்களுடன் பவர் பேங்க் power bank கருவிகளை வைத்திருக்கலாம் ஆனால் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, power bank-குகளை தலைக்கு மேலுள்ள பெட்டிகளில் வைக்கக்கூடாது; ஆனால் கையில் எடுத்துச் செல்லும் பையினுள் வைத்து இருக்கைக்கு அடியில் வைக்கலாம்.

மேலும் காந்த வயர்லெஸ் சார்ஜிங் power bank- குகளை ஒரு தனிப் பை அல்லது பாதுகாப்பு பையில் வைத்திருக்க வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளை விமானப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சியிலேயே, புதுப்பித்திருப்பதாக மலேசிய ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here