2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஆடவன் கைது

கோத்தா டாமான்சாராவில் உள்ள NSK பேரங்காடியினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து, அங்குள்ள நகைக்கடையிலிருந்து 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரன் ஐந்தே மணி நேரத்தில் போலீஸிடம் சிக்கினான்.

நேற்று மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கடையில் 3 பணியாளர்களும் வாடிக்கையாளரும் இருந்தனர். முகமூடி அணிந்திருந்த கொள்ளையன், திடீரென கைத்துப்பாக்கியை நீட்டியதால், கடையிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

துப்பாக்கி முனையில் அந்நால்வரையும் குனியச் சொல்லி, பின்னர் நகைகளோடு கொள்ளையிட்டு தப்பியோடினான். அந்த நபர் ரவாங், புக்கிட் பெருந்தோங்கில் நேற்றிரவு கைதானதை போலீஸ் உறுதிப்படுத்தியது. மேலும் அவன் கொள்ளையிட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here