தாமான் புக்கிட் கெம்பாஸில் குளத்தில் நூற்றுக்கணக்கான திலாப்பியா மீன்கள் மடிவு

தாமான் புக்கிட் கெம்பாஸில் (Taman Bukit Kempas) உள்ள குளத்தில் இன்று நூற்றுக்கணக்கான திலாப்பியா மீன்கள் மடிந்து மிதந்தன.

இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், வீட்டுப் பகுதிகளிலிருந்தும் கடைகளிலிருந்து கால்வாய்களில் வெளியாகும் ரசாயன கலவை தண்ணீரில் கலந்துவிட்டதனால் மீன்கள் மடிந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளதாக ஜெலுபு மீன்பிடித் துறை தலைவர் முகமட் அஸஹார் ஜுசோ (Mohd Azhar Jusoh) கூறினார்.

அத்துடன், 0.1 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் காற்றழுத்தம் இல்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here