சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஃபு வா (Fu Wa), ஃபெங் யி (Feng Yi) பாண்டாக்கள் தொடர்பான ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக, இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அமாட் தெரிவித்தார்.
இந்த பாண்டாக்கள் மலேசியா – சீனா இடையிலான நட்பின் அடையாளமாக திகழ்கின்றன. அவை உள்நாட்டு, வெளிநாடுகளின் சுற்றுப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மிருக காட்சி சாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் வகைசெய்கின்றன. இதனால், அவற்றை இங்கேயே வைத்திருப்பதை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.
ஃபு வா மற்றும் ஃபெங் யி ஆகிய இரண்டு பெரிய பாண்டாக்கள் கடந்த 2014 மே 21 ஆம் நாள் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு நட்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்டன. இது மலேசியா-சீனா உறவின் 40ஆம் ஆண்டு நிறைவை குறிக்கின்றது.
பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், ஸு நெகாரா குறைந்தபட்சம் இரண்டு வருட நீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது.
சீன அரசாங்கத்தால் ஸு நெகாரா உலகில் சிறந்த பாண்டா பராமரிப்பு மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது








