ஏறுமா விலை மாறுமா நிலை

கோலாலம்பூர் , மார்ச் 22-
அதிசயமான செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால் கொரோனா 19 என்று சொல்லுமுன் பெட்ரோல் விலையைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

ரோன் 95 ரகம் 38 காசு குறைந்து 1 வெள்ளி 45 காசாகவும் ரோன் 97 ரகம் 36 காசு குறைந்து 1 வெள்ளி 74 காசாகவும் டீசல் விலை லிட்டருக்கு 12 காசு குறைந்து 1 வெள்ளி 75 காசாகவும் மாறியிருக்கிறது.

கொரோனா 19 பல பாதிப்புகளைச் செய்தாலும் பெட்ரோல் விலைக் குறைப்பைச் சொல்லாமலேயே செய்துவருகிறது. கார்கள் ஓட்டம் இல்லாதபோது பெட்ரோல் விலைக்குறைப்பில் அர்த்தமில்லை. கடலில் நிலவின் வெளிச்சத்தால் என்ன பயன்?

முன்பெல்லாம பெட்ரோல் விலையேற்றம் கண்டால் பொருள்கள் விலை குதிரைச் சவாரி செய்ய ஆரம்பித்துவிடும். யானை மேல் ஏறி பவுசு காட்டும்.

இப்போது என்ன வந்தது. பெட்ரொல் விலை குறைந்து வருகிறது. பொருட்களின் விலை ஏறிவருகிறது. இது நேருக்கு மாறாக இருக்கிறது. இப்போது, பெட்ரோல் விலை குறைந்தும் எந்தப்பயனும் விளையப்போவதில்லை.

அதியாவசியப் பொருட்கள் விலை குறையாவிட்டால் பெட்ரோல் ஊற்றி சரி செய்துகொள்ள முடியாது. வயிற்றுக்கு பெட்ரோல் உணவாகவும் மாறவும் முடியாது.

பொருட்கள் காலாவதியானால் குப்பைக்குத்தான் இறையாகும். விலையை நியாய விலையாக மாற்றி, மக்களுக்கு உதவுங்கள் மக்களின் வாழ்வா சாவா என்றிருக்கும் இச்சமயத்தில் மனிதாபிமானமே உயர்வாக இருக்கவேண்டும். மதிக்கப்படும். மனித உணர்வைக்காட்டுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here