சீனாவில் 6 வயது சிறுவன் குச்சி மிட்டாய் சாப்பிடும் போது தவறி கீழே விழுந்தபோது, தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் குச்சி வாயில் குத்தி மூளையைத் துளைத்தது.
அச்சிறுவனின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைச் செய்ததில் 11 சென்டி மீட்டர் நீளமுள்ள குச்சி, மூளையின் பகுதியில் குத்தியிருப்பது தெரியவந்தது.
மருத்துவர்கள் சிறுவனின் நிலைமை மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
குச்சி தலையின் முக்கிய ரத்த நாளத்தை குத்தியதுடன், மூளையிலிருந்து ரத்தத்தை இதயத்திற்கு அனுப்பும் பகுதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. சிறிதளவு சிகிச்சையில் தவறு ஏற்பட்டால் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
அவ்வாறான சூழ்நிலையிலும், 7 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் குச்சியை மூளையையோ அல்லது ரத்த நாள்களையோ சேதப்படுத்தாமல் வெற்றிகரமாக அகற்றினர்.