2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 96 வது ரேங்க் இவர் எடுத்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி முதல் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக இவர் பதவி வகித்து வருகிறார். பிரதமர் அலுவலக பணியில் 2022ம் ஆண்டு சேர்ந்தார்.
முன்னதாக அவர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வரும் முன்பாக நிதி திவாரி, வணிக வரி துறையில் துணை ஆணையராக பணியாற்றினார். தனது பணியை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஎப்எஸ் பணி கிடைத்ததும் வணிக வரிதுறையில் இருந்து விலகி குடிமை பணிக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவில் துணை செயலராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.









