முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவி காலமானார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவி இன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.

இந்தச் செய்தியை அவரது மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுதீன் தனது instagram stories இல் உறுதிச்செய்தார்.

கைரியின் கூற்றுப்படி, அப்துல்லா அமாட் படாவி இரவு 7.10 மணிக்கு Institut Jantung Negara வில் காலமானார்.

பாக் லா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர், டாக்டர் மகாதிர் முகமட் தனது 22 ஆண்டுகால பதவிக்காலத்தை முடித்த பின்னர், 2003 இல் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here