மூவாரில் தொழிற்சாலை பேருந்துடன் கார் மோதியதில் இரு ஆடவர்கள் பலி

மூவார்:

ன்று காலை இங்குள்ள ஜாலான் சாலே-புக்கிட் பாசிரில், கார் ஒன்று தொழிற்சாலை பேருந்து மீது மோதியதில் இரண்டு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

காலை 6.18 மணியளவில் நடந்த இந்த விபத்தில், முஹமட் நூர் ஐமான் முகமட் அஜாரி (வயது 21) மற்றும் அமர் ஜஸ்லி யூசோஃப் (வயது 26) ஆகியோர் உயிரிழந்தனர்.

அதேநேரம் தொழிற்சாலைப் பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலை ஊழியர்கள் என்றும் அவர்கள் காயமடையவில்லை என்று, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி முகமட் ஃபாஸ்லி மாட் ஜின் கூறினார்.

மூவார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி, விபத்துக்குள்ளான காருக்குள் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டனர், ஆனால் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்கிருந்த துணை மருத்துவர்கள் அறிவித்தனர் என்றார்.

காலை 7.35 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது என்றும், விசாரணைக்காக பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here