கோலாலம்பூர்:
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பிரிக்ஃபீல்ட்ஸ் சுற்றியுள்ள எட்டு சில்லறை விற்பனை நிலையங்களில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேச அலுவலகத்தைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள், சோதனையிட்டனர்.
இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த்ஹிர சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதாக அதன் தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஷஹ்ரான் முகமட் அர்ஷத் தெரிவித்தார்.
குறித்த சோதனைகளின் போது சுமார் RM5,500 மதிப்புள்ள 238 கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெய், 64 பாக்கெட் கோதுமை மாவு, 75 பாக்கெட் சர்க்கரை மற்றும் 28 பெட்ரோலிய எரிவாயு தோம்பு(LPG) என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“வெளிநாட்டினர் நடத்தும் பல வணிக வளாகங்கள் விலைக் குறிச்சொற்களைக் காட்டாமல், சர்க்கரை, சமையல் எண்ணெய், மாவு மற்றும் LPG எரிவாயு போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்வதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது,” என்று அவர் நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் மற்றும் எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டம் 1972 இன் கீழ், சரிபார்க்கப்படாத எடை மற்றும் அளவீட்டு கருவிகளைப் பயன்படுத்தியதற்காக, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் கீழ் மற்றும் உரிமம் அல்லது எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை வர்த்தகம் செய்து சேமித்து வைப்பதற்காக, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1974 இன் பிரிவு 3(1) மற்றும் 18 ஐ மீறியதற்காக, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 இன் பிரிவு 21 இன் கீழ் நான்கு விசாரணை ஆவணங்களும் திறக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.




















